search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் தாக்குதல்"

    • தந்தை, மகன்கள் மீது புகார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே ஒண் ணுபுரம் வடக்கு விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவ ருக்கும் சகோதரர் கண்ணன் (50) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 10-ந்தேதி பொன்னுசாமி தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த கண்ணன், அவரது மகன்கள் செல்வராஜ் (35), செல்வ மூர்த்தி (30), ஆகிய 3 பேரும் ஆபாசமாக திட்டி கையாலும், கம்பாலும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பொன்னுசாமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக பொன்னுசாமியின் மகன் காமராஜ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • தூங்கி கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை எழுப்பிய சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • பிரியா முதியவரை எதற்காக தாக்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பஸ் நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

    இந்தநிலையில் பஸ் நிலைய வளாகத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை எழுப்பிய சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீ என் பணத்தை திருடி விட்டாய், பணத்தை கொடு, இல்லையென்றால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆத்திரமடைந்த அந்த பெண் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி முதியவரை தாக்கத்தொடங்கினார். முகத்திலும் உடலிலும் சரமாரியாக தாக்கினார். இதைப்பார்த்த பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி நடந்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் பணத்தை திருடிவிட்டதாக கூறியுள்ளார். அதற்கு பொதுமக்கள் ஏன் அவரை அடிக்கிறீர்கள், போலீசில் புகார் தெரிவிக்க வேண்டியதுதானே என்று எச்சரித்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த பெண் முதியவரை தொடர்ந்து தாக்கினார். கீழே படுத்திருந்த அவரை புரட்டி எடுத்ததுடன் நெஞ்சில் காலால் பலமுறை மிதித்தார். வயதான முதியவர் என்றும் பாராமல் அவர் இந்த செயலில் ஈடுபட்டார். அதோடு நிறுத்தாமல் அவரது சட்டையை பிடித்து தரையில் தரதர வென்று இழுத்து சென்றார். மேலும் அங்கிருந்த சுவரிலும் தள்ளினார். பொதுமக்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தார். இதில் முதியவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பெண் தாக்கியதில் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசவா என்று கெத்து காட்டி போலீசாரை திகைக்க வைத்தார். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த பிரியா என்பதும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அவர் மதுபோதையில் நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். அப்போதுதான் அவர் முதியவர் மீதான தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். முதியவர் பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பிரியா முதியவரை எதற்காக தாக்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் முதியவரை பிரியா சரமாரியாக தாக்கும் சம்பவத்தை பஸ் பயணிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட திருப்பூர் மத்திய பஸ் நிலைய வளாகத்தில் ஆதரவற்றவர்கள் பலர் தங்கி வருகின்றனர். இதில் சிலர் குடிபோதையில் படுத்து உறங்குகின்றனர். இதனால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு பயணிகள் தவிர மற்றவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலத்தில் குடிபோதையில் இருந்த முதியவரை தாக்கி பணம் பறித்த சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அந்த முதியவரிடம் கட்டுகட்டாக பணம் இருப்பதை சிலர் பார்த்தனர்.

    திருமங்கலம்

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் காஷாமைதீன்(வயது64). தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இவர் திருமங்கலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வந்து பணிபுரிவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அந்த ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி கடை உரிமையாளரிடம் வேலை பார்த்ததற்கான மீதி ஊதியம் ரூ.11ஆயிரத்து500 பணத்தை வாங்கிக்கொண்டு தனது ஊருக்கு கிளம்பினார். அதற்கு முன்பு திருமங்கலம் தாலூகா அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அருகே இருந்த பெட்டிக்கடையில் வாழைப்பழம் சாப்பிட்டார்.

    அப்போது காஷாமைதீனிடம் கட்டுகட்டாக பணம் இருப்பதை சிலர் பார்த்தனர். அவரிடமிருந்து பணத்தினை பறிக்க அவர்கள் திட்டம் தீட்டி காஷாமைதீனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவரை அந்த நபர்கள் மது அருந்த அழைத்துள்ளனர்.

    காஷாமைதீனும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விருதுநகர் ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மதுபான கடையில் மதுவாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கரிசல்பட்டி நான்கு வழிச்சாலைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ஆட்கள் இல்லாத இடத்தில் காஷாமைதீனை இறக்கிவிட்டு சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அவரிடமிருந்த ரொக்கபணம் ரூ.11ஆயிரத்து500 மற்றும் செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் சாலையோரம் மயங்கிக்கிடந்த காஷாமைதீனை மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காஷாமைதீன் பணிபுரிந்த ஜவுளிக்கடையை சேர்ந்த முகமது இத்ரீஸ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் மதுபான கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் காஷாமைதீனை தாக்கி பணம்-செல்போன் பறித்து சென்ற திருமங்கலம் கூழையாபுரத்தினை சேர்ந்த முத்துவேல்(19), சோமசுந்தரம் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(19), 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

    ×